இந்த ஐரோப்பியா நாட்டுடனான தகராறில் சமரசத்திற்கு இடமில்லை! ஜேர்மனி திட்டவட்டம்
சட்ட விதி தொடர்பாக போலந்துடனான தகராறில் சமரசத்திற்கு இடமில்லை என்று ஜேர்மன் ஐரோப்பா அமைச்சர் Michael Roth திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான போலந்தில் உள்ள உயர் நீதிமன்றம் ஒன்று, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் முக்கிய பகுதிகளை நிராகரித்து தீர்ப்பு அளித்து, இதை தொடர்ந்து போலந்து-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான மோதல் போக்கு தொடங்கியது.
ஒரு ஐரோப்பிய உறுப்பு நாடாக இருந்துக்கொண்டு, அதன் சட்டத்தையே போலந்து நிராகரித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதேவேளை, பிரஸ்ஸல்ஸில் நடக்கும் உச்சிமாநாட்டில் போலந்து சட்டவிதி தொடர்பான பிரச்சினை குறித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான சந்திப்புக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஜேர்மன் ஐரோப்பா அமைச்சர் Michael Roth, சட்டவிதி தொடர்பாக போலந்துடனான பிரச்சினையில் சமரசத்திற்கு இடமில்லை.
இதுகுறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஆனால் சமரசத்திற்கு இடமில்லை.
அத்தகைய பேச்சுவார்த்தையின் முடிவில், நாம் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தபோது என்ன உறுதியளித்தோம் என்பது பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
சிறப்பு ஒப்பந்தங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்று Michael Roth திட்டவட்டமாக கூறினார்.