மீண்டும் பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்: சமீபத்திய தகவல்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ராஜினாமா செய்தவரையே மீண்டும் பிரதமராக்கியுள்ள நிலையில், மீண்டும் அவருக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள்
சென்ற மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி, பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் (Sebastien Lecornu) என்பவரை நியமித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, அதாவது, அக்டோபர் மாதம் 5ஆம் திகதி, அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்த பிரதமர் செபாஸ்டியன், திங்கட்கிழமை, அதாவது, 6ஆம் திகதி, திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், 9ஆம் திகதி, ராஜினாமா செய்த செபாஸ்டியனையே மீண்டும் பிரதமராக்கினார் மேக்ரான்.
தொடர்ந்து பிரதமர்கள் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதும், அதனால் ஆட்சி கவிழ்வதுமாக பிரான்ஸ் அரசியல் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரதமர் செபாஸ்டியனுக்கு எதிராக மீண்டும் எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது என இரண்டு கட்சிகள் முடிவு செய்தன.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் செபாஸ்டியன் தலை தப்பிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியது.
வெறும் 18 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.
அடுத்ததாக, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Marine Le Pen தலைமையிலான National Rally கட்சி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளது.
National Rally கட்சிக்கு ஆதரவளிக்க மற்ற கட்சிகள் முன்வராது என்பதால், அக்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறாது என்றும், செபாஸ்டியன் தப்பிவிட்டார் என்றே கூறலாம் என்றும் பிபிசி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அதேபோல, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் மீதான இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் தோல்வியடைந்துள்ளது.
அது வெற்றி பெற 289 வாக்குகள் தேவை என்னும் நிலையில், 144 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால், இரண்டாவது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் தோல்வியடைந்துள்ளது, செபாஸ்டியன் தலை தப்பிவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |