No Cost EMI -ல் பொருள் வாங்க போறீங்களா? அதில் இருக்கும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்
தற்போதைய காலத்தில் பலரும் மாத தவணையில் (EMI) பொருள்கள் வாங்கும் நிலையில் அதில் இருக்கும் ஆபத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
No Cost EMI
இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கும் No Cost EMIயை தான் அதிகம் விரும்புகின்றனர். அதாவது வட்டி செலுத்த தேவையில்லை என்பது தான்.
பெரும்பாலான நிறுவனங்கள் "Buy Now, Pay Later" ஆப்ஷனை தான் அதிகமாக விளம்பரம் செய்வார்கள். அதாவது Credit card மூலம் நாம் எந்தவொரு பொருளையும் சுலபமாக வாங்கலாம்.
அதாவது நாம் பொருளை வாங்கும் போது பணம் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த காரணத்தினால் தான் பலரும் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.
பொதுவாக நாம் EMI மூலம் பொருளை வாங்கும் போது 15 முதல் 20% வரை வட்டி கட்ட வேண்டும். இதுவே நாம் No Cost EMI -ல் பொருளை வாங்கும்போது ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லை.
இதில் No Cost EMI என்பது செலவில்லாத EMI அல்ல, அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் மறைமுகமாக சில கட்டணங்களை கட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு, ஒரு பொருளை நீங்கள் ரூ.30 ஆயிரத்திற்கு 6 மாத கால No Cost EMI -ல் வாங்குகிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அதனை நீங்கள் ரூ. 5 ஆயிரம் விகிதம் 6 மாதங்களுக்குக் கட்டினால் போதும்.
இதில் No Cost EMI என்ற ஆப்ஷனை நமக்கு வழங்குவது வங்கிகள் இல்லை. அதன் சம்மந்தப்பட்ட ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தான் வழங்குகின்றன.
அதாவது, வங்கிகளுக்கு நீங்கள் வழக்கம் போலவே வட்டியை செலுத்துவீர்கள். அதனால் இந்த நிறுவனங்கள் கழித்து விடுகின்றன. அதாவது, 6 மாதத்திற்கு 16%, கிட்டத்தட்ட ரூ.1400 வட்டி கட்ட வேண்டும். அப்படியானால்,
நீங்கள் வாங்கும் பொருளின் மதிப்பான ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1400 -யை கழித்து விடுவார்கள். அதன்படி நமக்கு பில் ஆகி EMI செலுத்துவதே மீதமுள்ள 28,400 ரூபாய்க்கு தான்.
அதாவது நம்மிடம் நேரடியாக இஎம்ஐ தொகையில் வட்டியை போடாமல் தள்ளுபடி போல தருவது நஷ்டம் தான். அதற்கு பதிலாக நம்மிடம் இருந்து மறைமுகமாக கட்டணங்களை வசூல் செய்வார்கள்.
முதலில் பிராசஸிங் ஃபீஸ் கட்டணம் (Processing Fee) உங்கள் இஎம்ஐ கட்டண முறையைப் பரிசீலிக்க இந்தக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இது வங்கிகளைப் பொருத்து ரூ.99 முதல் ரூ. 300 வரை இருக்கும்.
அதற்கு தனியாக 18% ஜஎஸ்டி வரியும் கட்ட வேண்டும். அடுத்து நாம் மாதம் தோறும் EMI கட்டும்போது ஜிஎஸ்டி அதில் வராது. எனவே, நாம் சில நூறு ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |