CSK அணி மீதான காதலுக்கு இதுதான் காரணம்! உண்மையை வெளிப்படுத்திய ஜடேஜா
சென்னை அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடும், இவர்கள் மேலே, கீழே என்ற வித்தியாசமும் ஒருபோதும் இருந்தது இல்லை என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
CSK அணியுடனான பயணம்
சி.எஸ்.கே அணியின் முதன்மையான வீரர்களில் ஒருவராக ஜடேஜா திகழ்ந்து வருகிறார், இவர் சுமார் 11 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த சீசனில் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ரவீந்திர ஜடேஜாவிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக நம்பப்பட்டது.
ஆனால் ஜடேஜாவை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய தொகைக்கு தக்கவைத்துள்ளது.
CSK-வில் பாகுபாடுகள் இல்லை
இந்நிலையில் CSK அணியை ஏன் தனக்கு பிடிக்கும் என்ற காரணத்தை ஜடேஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், CSK அணி நிர்வாகமோ அல்லது அதன் உரிமையாளர் சீனிவாசன் அவர்களோ இதுவரை அணியில் சரியாக செயல்படாத வீரர்கள் யார் மீதும் அழுத்தத்தை செலுத்தியது இல்லை.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, அணியில் எத்தகைய பாகுபாடும் கிடையாது. சீனியர்கள் ஜூனியர்கள் என அனைவரும் ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள்.
சீனியர் வீரர்களுக்கு எந்த மரியாதை வழங்கப்படுகிறதோ அதே மரியாதை தான் ஜூனியர் வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
CSK அணியின் வீரர்கள் யாரும் தங்களுக்குள் பாகுபாடு பார்க்க மாட்டார்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வமானது என ஜடேஜா தெரிவித்துள்ளார்.