கர்ப்பிணி பெண்ணின் சாபம் - பல நூறு ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமம்
வரும் அக்டோபர் 20 ஆம் திகதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று, குடும்படுத்துடன் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாடுவர்.
கர்ப்பிணி பெண்ணின் சாபம்
ஆனால், ஹிமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில், கர்ப்பிணி பெண் ஒருவரின் சாபத்தால் பல நூறு ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.
ஹிமாச்சலப்பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் சம்மூ(sammoo village) கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் மன்னரின் படையில் ஒரு இருந்த சிப்பாய் ஒருவர் தீபாவளி அன்று உயிரிழந்தார்.
அவரது உடலை இறுதி சடங்கு செய்து எரிக்கும் போது, அந்த நபரின் கர்ப்பிணி மனைவியும் தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அந்த பெண் தீயில் விழுவதற்கு முன்னர், இனி கிராமத்தில் தீபாவளி கொண்டாட முடியாது என சாபமிட்டார்.
அந்த கிராம மக்கள் அதனையும் மீறி தீபாவளி கொண்டாட முயற்சித்தால், யாரவது அங்கு உயிரிழந்து விடுவார்கள் அல்லது பேரழிவு நிகழும். இந்த அச்சம் காரணமாக அந்த மக்கள் தீபாவளி கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
தீபாவளி நாளில் புத்தாடை எடுக்காமல், சிறப்பு உணவு சமைக்காமல், பட்டாசு வெடிக்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சாபத்தை நிவர்த்தி செய்ய தியாகம் நடத்தியும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த ஆண்டும், வழக்கம் போல் சம்மூ கிராம மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை தவிர்க்க உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |