அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் வாக்குவாதம் செய்த கஞ்சா கருப்பு
போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நடிகர் கஞ்சா கருப்பு, அங்குள்ள ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம்
நடிகர் கஞ்சா கருப்பு கால் வலி காரணமாக சென்னை போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்க யாரும் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவரும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சையளிக்க யாரும் இல்லாததால் ஊழியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் செய்துள்ளார்.
அவர் பேசுகையில், "லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனையை மருத்துவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான் வருகிறார்கள். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க யாருமே இல்லை. வேதனையாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |