பிரித்தானியாவை மற்றொரு கொரோனா அலை தாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! ஓஎன்எஸ் தலைவர் எச்சரிக்கை
இலையுதிர்காலத்தில் மற்றொரு கொரோனா அலை ஏற்படும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று பிரித்தானியா தேசிய புள்ளிவிவர நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Chris Whitty, மக்கள் நடமாட்டங்களை மீண்டும் அனுமதிப்பதில் இன்னும் அபாயங்கள் இருப்பதாகவும், கோடைகாலத்தின் பிற்பகுதியில் அல்லது இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றின் போது பிரித்தானியா ஒரு கட்டத்தில் மற்றொரு தொற்று பரவலை சந்திக்கும் என்றும் கூறியதைத் தொடர்ந்து Ian Diamond இவ்வாறு எச்சரிக்கை விடுதுள்ளார்.
எத்தனை பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன என்பதில் பிராந்திய வேறுபாடுகள் நிறைய உள்ளன என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் (ஓஎன்எஸ்) தலைவர் பேராசிரியர் Ian Diamond கூறினார்.
தரவுகளில் ஏற்படும் முன்னேற்றங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அற்புதமான தடுப்பூசி விநியோகத்தின் தாக்கத்தை கவனிக்க வேண்டும் என்று Ian Diamond கூறினார்.
ஆனால் இது ஒரு வைரஸ், இது முற்றிலும் ஒழியபோவதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இலையுதிர்காலத்தில் மேலும் கொரோனா ஏற்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பிரித்தானியா தேசிய புள்ளிவிவர நிபுணர் Ian Diamond எச்சரிக்கை விடுத்துள்ளார்.