பிரித்தானியர்களுக்கு மாஸ்குகளிலிருந்து விடுதலை... போரிஸ் ஜான்சன் அறிவிக்க இருக்கும் புதிய தகவல்கள்
பிரித்தானியாவில் ஜூலை 19 முதல் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ள நிலையில், மாஸ்குகள் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் வேண்டுமானால் மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.
முடிந்தவரை, கிட்டத்தட்ட சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கையாக இந்த மாஸ்கிலிருந்து விடுதலை அளிக்கும் திட்டத்தை அறிவிக்க இருக்கிறார் போரிஸ் ஜான்சன்.
அத்துடன், சமூக இடைவெளி, ஓரிடத்தில் ஆறு பேர் மட்டுமே கூடுதல், திறந்த வெளி நிகழ்ச்சிகளில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி ஆகிய கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வர உள்ளன.
மேலும், இசை நிகழ்ச்சிகள் முதலான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கொரோனா பாஸ்போர்ட் வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கூட அமைச்சர்கள் கிடப்பில் போட்டுவிட்டதாக இன்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு வெளியான ஒரு தகவலின்படி, ஜூலை 19 அன்று இரவு விடுதிகள் இயங்கக்கூட அனுமதிக்கப்படும் என்றும், வாடிக்கையாளர்களை வாசலில் நிறுத்தி சோதிக்க அவசியம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த முடிவுகளை பிரித்தானிய பிரதமர் அடுத்த வாரம் வாக்கில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.