பிரான்சில் திடீரென ஒன்று கூடிய பொதுமக்கள்! கொரோனா விதிகளை மதிக்காமல் கூடிய கூட்டம்
பிரான்சின் குறிப்பிட்ட பகுதி ஒன்றில், மக்கள் இரண்டாவது நாளாக ஒன்று கூடிய சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் தற்போது வரை கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.
ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், நாட்டின் Esplanade des Invalides பகுதியில் பல நூறு பொதுமக்கள் ஒன்று கூடினர். இது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்துள்ளது.
ஒன்று கூடிய மக்கள், அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாம இடம்பெற்ற இந்த விருந்து விழாவில், காவல்துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து போகும் படி அறிவுறித்தினர்.
அப்போது பொலிசார் மீது தாக்குதல் நடந்தாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.