உத்தரவாதம் இல்லை! பிரித்தானியா பள்ளிகள் தொடர்பில் உண்மையை உடைத்த சுகாதார செயலாளர்
பிரித்தானியாவில் பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என நாட்டின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தொற்றுநோய் அதிவேகமாக பரவி வருவதால் மீண்டும் பள்ளிகளை முட சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்த சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெளிவுப்படுத்தியுள்ளார்.
சஜித் ஜாவித் கூறியதாவது, இது போன்ற நடவடிக்கைகளை நான் விரும்பவில்லை. குறிப்பாக பூஸ்டர் தடுப்பூசி திட்டம் போன்ற மற்ற நடவடிக்கைகளில் நான் கவனம் செலுத்தப் போகிறேன்.
பிரித்தானியாவில் பள்ளிகள் மூடப்படாது என்பதற்கு உத்தரவாதம் கேட்டால், நான் கல்வித்துறை செயலாளர் இல்லை, சுகாதார செயலாளராக நான் கூறுவது என்னவென்றால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்று வரும் போது, எந்தவித உத்தரவாதமும் அளிக்க முடியாது.
ஆனால் இந்த விஷயத்தில், தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வேலை செய்கிறது என்பது எங்களுக்குத் தெரியும் என சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
தொடர்ந்து பள்ளிகளை திறந்து வைப்பதே தங்களின் முன்னுரிமைகளில் ஒன்று என பிரித்தானியா அரசாங்கம் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.