மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் தற்போதைய நிலை: சமீபத்திய தகவல்
ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர்
ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொலை செய்ததாக கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா அந்நாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜூலை மாதம் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்திய அரசு மற்றும் சில தனி நபர்கள் முயற்சியின்பேரில் நிமிஷாவின் தண்டனை தள்ளிவைக்கப்பட்டது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், நிமிஷாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் Save Nimisha Priya International Action Council என்னும் அமைப்பு, நிமிஷா உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிமிஷாவைக் காப்பாற்ற தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும், ஆகவே, அவர் தொடர்பிலான வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்குமாறும் அந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆகவே, உச்சநீதிமன்றம் வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |