டிக்டாக்கை வாங்க விருப்பமில்லை: பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து
டிக்டாக் செயலியை வாங்க விருப்பமில்லை என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிக்டாக் செயலிக்கு தடை
டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் சீனாவைச் சேர்ந்தது என்பதால், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக்கை தடை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜேர்மனியில் பெரும் செல்வந்தர் மத்தையாஸ் டெஃனர் கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் எலான் மஸ்க் டிக்டாக் குறித்து பேசினார்.
அவர் தனது உரையில், "டிக்டாக்கை வாங்க நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை வாங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை," என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும், ட்விட்டர் சமூக ஊடகத் தளத்தை வாங்கி பின்னர் அதை எக்ஸ் என்று பெயர் மாற்றிய எலான் மஸ்க், தனிப்பட்ட முறையில் டிக்டாக்கை பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |