இதற்கு எனக்கு விருப்பமில்லை..! வெளிப்படையாக உறுதிப்படுத்திய இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே
சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக எந்த ஆர்வமும் இல்லை என்று இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து ‘The Hundred Men's Competition’ இறுதிப் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுத்தன் பிரேவ் கோப்பையை கைப்பற்றியது.
கோப்பையை வென்ற சவுத்தன் பிரேவ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனேவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
ஐபிஎல் தொடரில் மஹேலா ஜெயவர்தனே பயிற்சியில் 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸை சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘The Hundred Men's Competition’ வெற்றிக்கு பின் பேசிய மஹேலா ஜெயவர்தனே, சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக எந்த ஆர்வமும் இல்லை என கூறினார்.
ஒரு வீரராக 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டேன், ஆண்டின் 12 மாதங்களுக்கு ஒரு சூட்கேஸுடன் தற்காலிகமாக எங்காவது வாழ நான் விரும்பவில்லை.
நான் நிறைய தொடர்களில் பங்கேற்பதில்லை, அதனால் நாடு திரும்பி குடும்பத்துடன் தனிப்பட்ட நேரம் செலவிட முடிகிறது.
அங்கும் இங்கும் (இலங்கையுடன்) ஆலோசகராக உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆனால் முழு நேர அடிப்படையில் அல்ல ஏனென்றால் நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவில்லை என மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.