பிக்பாஸ் இறுதிப் போட்டிக்கு என்னை கூப்பிடவில்லை! டைட்டில் வின்னர் ஆரி வேதனை
பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி, தன்னை பிக்பாஸ் சீசன் 5 இறுதிப் போட்டிக்கு அழைக்கவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழில் ஓளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின், நேற்றைய இறுதி நாளில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இந்த இறுதிப் போட்டிக்கு தன்னை அழைக்கவில்லை என்று கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் வெற்றியாளர் ஆரி கூறியுள்ளார்.
ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் இறுதி போட்டியின் போது, கடந்த முறை வெற்றியாளர் அழைக்கப்படுவது வழக்கம், ஆனால் இந்த முறை அழைக்கப்படவில்லை.
இது குறித்து ஆரி, பிக்பாஸ் சீசன் 5 இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்தேன்.
கமல்ஹாசன் மற்றும் இதர போட்டியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு அழைப்பு வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.