மன்னர் சார்லஸ் வேண்டாம்... விரைவில் முடிவு செய்யவிருக்கும் நாடு
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானியாவைக் குறித்த உலக மக்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மன்னராட்சி வேண்டாம்
பிரித்தானியாவின் ஒரு பாகமான வேல்ஸ் நாட்டிலேயே மன்னராட்சிக்கு எதிர்ப்பு உருவாகியது நினைவிருக்கலாம். 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், மன்னராட்சி வேண்டாம் என முடிவு செய்த Barbados நாடு, மன்னருக்கு பதிலாக ஜனாதிபதியைத் தேர்வு செய்து மக்களாட்சி நாடாக மாறியுள்ளது.
Barbadosஐத் தொடர்ந்து மன்னராட்சிக்கு எதிரான எண்ணங்கள் இப்போது பல நாடுகளில் வேகமாக பரவிவருகின்றன.
Image: Getty Images
விரைவில் முடிவு செய்யவிருக்கும் மற்றொரு நாடு
இந்நிலையில், விரைவில் மன்னராட்சிக்கு முடிவு கட்ட அவுஸ்திரேலியா முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் புதிய உயர் ஆணையரான Stephen Smith இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியர்களுக்கு மன்னராட்சி மீது மரியாதை உள்ளதை மறுப்பதற்கில்லை என்று கூறும் அவர், அதே நேரத்தில், மன்னராட்சி விரைவில் அகற்றப்பட இருப்பது தவிர்க்க இயலாத ஒரு விடயம் என்கிறார்.
தனது அரசியல் சாசனம் குறித்து அவுஸ்திரேலியா எடுக்கும் முடிவுகளால் மன்னராட்சி மீதான அன்பும் மரியாதையும் போய்விடப்போவதில்லை என்கிறார் அவர்.
மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட 14 நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images