விடுமுறை கொடுக்காத முதலாளி.., கடல் தாண்டி வீடியோ காலில் நடந்த திருமணம்
விடுமுறை கிடைக்காத காரணத்தால் கடல் தாண்டி வீடியோ காலில் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர்.
வீடியோ காலில் திருமணம்
இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டியில் வைத்து மணமக்களுக்கு வீடியோ கால் மூலம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில், மணமகன் துருக்கி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஆனால், அவரது முதலாளி திருமணத்திற்கு விடுமுறை கொடுக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில், மணமகளின் தாத்தா நோய்வாய்ப்பட்டு இருப்பதால் திருமணத்தை உடனே நடத்தி முடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர்.
இதனால் மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினர் மெய்நிகர் 'நிக்கா'வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோ கால் மூலம் திருமணம் நடைபெற்றது. இதில், மணமகன் துருக்கியில் இருந்தும், மணமகள் பிலாஸ்பூரிலிருந்தும் திருமணம் செய்து கொண்டனர்.
இதேபோல கடந்த ஆண்டு, சிம்லாவில் உள்ள கோட்கரைச் சேர்ந்த ஆஷிஷ் சிங்கும், குலுவில் உள்ள பூந்தரைச் சேர்ந்த ஷிவானி தாக்குரும் நிலச்சரிவு காரணமாக திருமணம் செய்து கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |