மாயமான 21 வயது இளம்பெண்: கண்ணீருடன் கெஞ்சும் சுவிஸ் தாயார்
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் மண்டலத்தில் 5 வாரமாக காணாமல் போன மகள் தொடர்பில் தாயார் ஒருவர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.
Adligenswil பகுதியை சேர்ந்த 21 வயதான Alishia ஏப்ரல் 21 முதல் காணாமல் போயுள்ளார். இதுவரை இப்படியான எந்த சம்பவமும் நடந்திராத நிலையில், Alishia-வின் தாயார் Anita Bucher கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
Alishia தொடர்பில் புகார் அளிக்கப்பட்ட மே 1ம் திகதி முதல் பொலிசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை Alishia குறித்த தகவல் ஏதும் பொலிசாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
பொதுமக்கள் எங்கள் Alishia-வை மீட்டு தருவார்கள் என நம்பியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார் அவரது தாயார். மட்டுமின்றி, எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம், எங்களை இன்னும் வருந்த விடாதே என அந்த தாயார் கண்ணீருடன் கெஞ்சியுள்ளார்.
இதனிடையே, Alishia தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து சில பல தகவல்கள் கிடைத்திருந்தாலும், அவை மாயமான Alishia-வை கண்டுபிடிக்கும் வகையில் இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், Alishia தொடர்பில் வன்முறை சம்பவம் ஏதும் நடந்துள்ளதாக இதுவரை தகவல் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.