இனி WhatsApp Web பயன்படுத்தும் போது QR Code ஸ்கேன் செய்ய வேண்டாம்!
நாம் டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு WhatsApp Web மூலம் QR Code ஸ்கேன் செய்ய வேண்டாம். அதற்கான மாற்று வழிமுறைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாற்று வழிமுறை
உங்களது வாட்ஸ் அப்பை வேறொரு சாதனத்தில் பயன்படுத்த விரும்பினால், வெப் அல்லது ஆப்பில் ஸ்கேன் குறியீடு மூலம் மொபைலில் உள்ள வாட்ஸ் அப்பில் புதிய பயன்பாட்டை இணைத்தல் என்ற பிரிவில் சென்று இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால், இந்த புதிய மாற்று வழியானது தற்போது சிலருக்கு மட்டும் செயல்பட்டு வருகிறது. அதாவது, வாட்ஸ் அப் பீட்டாவைப் பயன்படுத்துபவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பின் திரையின் காண்பிக்கப்படும் எண்ணெழுத்து குறியீட்டை பயன்படுத்தி நாம் மேனுவலாக உள்ளிட வேண்டும். அதாவது நாம் QR Code வைத்து செய்வதை, இப்போது மேனுவலாக செய்ய வேண்டும்.
செயல்முறை
வாட்ஸ் அப் வெப்பில் லிங்க் வித் ஃபோன் எண்ணைக் கிளிக் செய்ததும் ஒரு படிவம் காண்பிக்கப்படும். அதில் உங்களது நாட்டின் குறியீடு மற்றும் மொபைல் எண்ணை குறிப்ப்பிடுமாறு காண்பிக்கப்படும். பின்பு, வாட்ஸ் அப் வெப்பில் உள்நுழைவு முறையானது தோன்றும்.
இதனையடுத்து நீங்கள், பின்தொடர் என்பதை கிளிக் செய்தால் எட்டு எழுத்துகள் கொண்ட எண்ணெழுத்துக்கள் குறியீடுகள் ஹைபனால் பிரித்து காண்பிக்கப்படும்.
இதன்பின் தான் நீங்கள் மொபைலில் வாட்ஸ் அப் செயல்முறையை தொடங்க வேண்டும். மொபைல் வாட்ஸ் அப்பில் உள்ள மெனுவை கிளிக் செய்த பின்பு புதிய சாதனத்தை இணை என்பதை தொடர வேண்டும்.
அப்போது நீங்கள் மொபைல் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி கீழே உள்ள ஃபோன் எண்ணுடன் இணைப்பை தொடர வேண்டும்.
அப்படி நாம் செய்தால், வாட்ஸ்அப் வெப் இணையத்தில் காட்டப்படும் குறியீட்டிற்கான விண்டோ ஓபன் ஆகும். குறியீடு சரியாக இருந்தால் மட்டுமே நாம் உள்நுழைய முடியும்.
இதனால் என்ன பயன் என்றால், உங்களது மொபைல் கேமரா சரியில்லாமலோ, உடைந்து இருந்தாலோ இந்த மாற்று வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |