ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது இல்லை! ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் காட்டம்
ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படாதது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் விமர்சித்துள்ளார்.
69 -வது தேசிய விருது
69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல பிரிவுகள் உள்பட விருதுகள் வழங்கப்பட்டன.
அப்போது, சர்ச்சைக்குள்ளான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான 'நர்கிஸ் தத்' விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன.
மோசமான திரைப்படம்
'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட விருது குறித்து சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Congratulations to all the #NationalFilmAwards2023 #kashmir files for being judged as a worst film of the decade.
— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
அவர் தனது ட்விட்டர் பதிவில்,"69-வது தேசிய திரைப்பட விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நூற்றாண்டின் மிக மோசமான படம் தி காஷ்மீர் பைல்ஸ்" என்று கூறியிருந்தார்.
ஜெய் பீம் திரைப்படம்
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து சினிமா ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
We in the film ferernity are united in our happiness for this year's #NationalAwards
— pcsreeramISC (@pcsreeram) August 25, 2023
Did they leave out " jaibeem"due to any particular reason or is it the voice if INDIA which has them given jitters .
இதற்கு பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில்,"ஜெய்பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை தருகிறதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |