கடவுள் வேண்டாம்... தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ள சுவிஸ் அரசியல்வாதி
அரசியல் சாசனத்தில் கடவுளைக் குறித்து குறிப்பிடுவதை நீக்கவேண்டும் என்று கோரி, தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்
சுவிஸ் அரசியல்வாதி ஒருவர். சுவிட்சர்லாந்தின் அரசியல் சாசனத்தின் முகப்புரையில் (preamble) ’சர்வ வல்லமையுடைய கடவுளின் பெயரால், சுவிஸ் மக்களும் மாகாணங்களும் தங்கள் கடமைகளை செய்வதில் முழுக்கவனம் செலுத்த கடமைப்பட்டவர்கள்’ என கூறப்பட்டுள்ளது.
சூரிச்சைச் சேர்ந்த தேசிய கவுன்சிலரான Fabian Molina என்பவர், இந்த கூற்று பொருத்தமானது அல்ல என்றும், அரசியல் சாசனம் மனிதர்களின் நம்பிக்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையை அளிப்பதால், இந்த கூற்று அதற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, அரசியல் சாசனத்தில் கடவுளைக் குறித்து குறிப்பிடுவதை நீக்கவேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் Fabian. அந்த தீர்மானத்தில், Socialist, Green மற்றும் Green Liberal கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்.
இப்போதைக்கு தனது தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு குறைவுதான் என்றே கூறிவிட்ட Fabian, என்றாலும், பின்னாட்களில் அது வெற்றி பெறலாம் என்கிறார்.