தடுப்பூசி போட விருப்பம் இல்லை... வாட்டிகனில் பணிபுரியும் சுவிஸ் பாதுகாவலர்கள் எடுத்துள்ள முடிவு
வாட்டிகனில் பாதுகாவலர்களாக பணிபுரியும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாவலர்கள் மூவர் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிவிட்டார்கள்.
போப்பாண்டவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் அந்த மூவரும்.
போப் பிரான்சிஸ், கொரோனா தடுப்பூசி பெறுவதன் அவசியம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.
வாட்டிகனுக்குள் நுழையும் அனைவரும் ஒன்றில் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும், அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை செய்து நிரூபிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் நாட்டவர்களான அந்த மூன்று பாதுகாவலர்களும் தங்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்பதால், வாட்டிகன் பாதுகாப்புப் பணியிலிருந்து தாங்களாகவே தங்களை விடுவித்துக்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பிவிட்டார்கள்.
மேலும் மூன்று பேர் தடுப்பூசி பெறக் காத்திருக்கும் நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.