இளவரசி கேட்டின் புற்றுநோய் குறித்த தகவலை ஹரி மேகன் தம்பதியருக்கு யாரும் கூறவில்லை: சமீபத்திய தகவல்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என வெளியாக தகவல் ராஜ குடும்ப நலம் விரும்பிகளையும், பிரித்தானியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தகவலறிந்த பலரும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளவரசி கேட்டுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.

Image: Getty Images
ஹரி மேகன் தம்பதியருக்கு இளவரசி கேட் குறித்த செய்தியை யாரும் கூறவில்லை
மற்றவர்களைப்போலவே, இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும்கூட இளவரசி கேட் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.

STEPHEN POND//GETTY IMAGES
இந்நிலையில், இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விடயம் குறித்து ஹரி மேகனுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களைப்போலவே, இளவரசி கேட்டிற்கு புற்றுநோய் பாதித்துள்ளது குறித்து தொலைக்காட்சி வாயிலாகத்தான் அவர்கள் தெரிந்துகொண்டதாகவும் தற்போது தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |