கோலி.. பாபர் அசாமை ஓரங்கட்டிய ஹர்பஜன்! தோனி தலைமையில் ஆல்-டைம் டி20 அணி அறிவிப்பு
இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், டி20 போட்டிக்கான தனது ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆகியோரை ஹர்பஜன் தனது ஆல் டைம் டி20 பிளேயிங் லெவன் அணியில் தேர்வு செய்யவில்லை.
ஹர்பஜன் சிங்கின் ஆல்-டைம் டி20 பிளேயிஙக் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்:
- ரோகித் சர்மா(இந்தியா)
- கிறிஸ் கெய்ல்(வெஸ்ட் இண்டீஸ்)
- ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து)
- ஷேன் வாட்சன்(ஆஸ்திரேலியா)
- ஏபி டிவில்லியர்ஸ்(தென் ஆப்பிரிக்கா)
- எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்) (இந்தியா)
- பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்)
- போலார்டு(வெஸ்ட் இண்டீஸ்)
- சுனில் நரைன்(வெஸ்ட் இண்டீஸ்)
- லசித் மலிங்கா(இலங்கை)
- பும்ரா(இந்தியா)
ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன், அவரது பேட்டிங் திறமையா் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் என ஹர்பஜன் கூறினார்.
மேலும், பேட்டிங் வரிசையை நேரத்திற்கு ஏற்ப மாற்றலாம், போலார்டை தேவைபடும் போது முன்னதாகவும், பின்தாகவும் களமிறக்கலாம்.
போலார்டு இல்லாத எந்த டி20 அணியும் முழுமையற்றது என ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.