ரோகித் சர்மாவை அசிங்கப்படுத்திய பிசிசிஐ - கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை ஐசிசி புறக்கணித்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது.
இதனைத் தொடர்ந்து 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போஸ்டரை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து அணிகளின் கேப்டன் படங்களும் இடம் பெற்றுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோலி படம் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதால் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால்,ஐசிசி இன்னும் விராட் கோலி தான் கேப்டன் என்பது போல் சித்தரித்து இருப்பதாக ரோகித் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி ரசிகர்கள் அணியின் ஸ்டார் வீரர்களை மட்டும் தான் ஐசிசி. போஸ்டரில் வெளியிட்டுள்ளதாகவும், விராட் கோலி தான் ஸ்டார் என்பதால் அவர் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும் தன்னிலை விளக்கமளித்துள்ளனர்.