தாலிபானை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கனடாவில் தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
தாலிபான் பயங்கரவாதக் குழு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஆப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தாலிபான்கள் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை 'ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்' என மாற்றியமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், புதிய அரசாங்கத்தை அமைக்க உலக நாடுகளிடம் தாலிபான் குழுவினர் இன்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இன்று இது குறித்து பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "தாலிபான்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர்.
தாலிபான்களை ஆப்கானிஸ்தானின் புதிய அரசாக ஏற்றுக்கொள்ள கனடாவிற்கு எந்த திட்டமும் இல்லை. ஏனெனில், தாலிபான் என்பது கனேடிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும்.
இப்போதைக்கு, ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதிலேயே எங்கள் முழு கவனமும் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.