இத்தாலியை போல் பிரித்தானியாவில் இது கட்டாயமாக்கப்படாது! கிராண்ட் ஷாப்ஸ் உறுதி
இத்தாலியை போல் பிரித்தானியாவில் ஆசிரியர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என போக்குவரத்து செயலாளர் கிராண்ட ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என இத்தாலி அறிவித்துள்ளது.
மேலும், பொது மற்றும் தனியார் துறைகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிப்ரவரி 15 முதல், தங்கள் பணியிடத்தை அணுக தடுப்பூசி பாஸ் அவசியம் என்று இத்தாலி அரசாங்கம் அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியை போல் பிரித்தானியாவில் தடுப்பூசி கட்டாயமாக்கப்படாது என போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் உறுதியளித்துள்ளார்.
நாம் சுதந்திரமான சமுதாயத்தில் வாழ்கிறோம், எனவே மக்கள் கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என நாங்கள் உத்தரவிடமாட்டோம்.
தடுப்பூசி போடதவர்கள், கொரோனா பரிசோதனை மூலம் தான் அவர்களின் அனைத்து விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை அறிவார்கள்.
அதற்கு அவர்கள் அதிகமான நேரத்தை மற்றும் பணத்தை செலவிட நேரிடும் என கிராண்ட ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.