One in, one out திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் நிலை என்ன?
One in, one out திட்டத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர், அங்கு அச்சத்துடனும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் வாழ்ந்துவருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
One in, one out திட்டம்
சிறுபடகுகள் மூலம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் One in, one out திட்டம் என்னும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 113 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் நிலைமை
Afran (புனைபெயர்), One in, one out திட்டத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முதல் புலம்பெயர்ந்தோர்.
சமீபத்தில் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட முதல் பெண்ணுடன் அவர் அங்கு தங்கியிருக்கிறார்.
ஆட்கடத்தல்காரர்களுக்கு பயந்து நான் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடினேன். பிரித்தானிய அதிகாரிகள் என்னை பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இப்போது, அதே ஆட்கடத்தல்காரர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். முகாமிருந்து வெளியே செல்லும்போதெல்லாம் அவர்கள் குறித்த பயம் எனக்கு இருக்கிறது. பிரான்சில் எனக்கு பாதுகாப்பில்லை என்கிறார் Afran.

Afranம், அவருடன் கூட இருக்கும் மற்ற இரண்டு பேரும், தங்களுடன் இருக்கும் பெண் புலம்பெயர்ந்தோர் குறித்து அதீத கவலையுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஒரு பெண்ணை பிரான்சுக்கு திருப்பி அனுப்பவேண்டுமென கேள்வி எழுப்புகிறார் Afran.
அதேபோல, அந்தப் பெண்ணும், தான் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்படும்போது, பிரித்தானியாவில் இருந்த பாதுகாவலர்கள் கூட, தான் உள்துறை அலுவலகத்தால் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படுவது குறித்து அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவிக்கிறார்.
தன் நாட்டில் தான் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதால், பிரித்தானியாவிலிருக்கும் தன் சகோதரருடன் இணைந்துகொள்ளலாம் என பல நாடுகள் வழியாக பயணித்து பிரித்தானியாவை அடைந்ததாகவும், அங்கு தான் பாதுகாப்பாக இருப்பேன் என நம்பியதாகவும் தெரிவிக்கிறார் எரித்ரியா நாட்டவரான அந்தப் பெண்.
ஆனால், தான் பிரித்தானியா வந்தபோது, அங்கு அதிகாரிகள் தன்னை தடுப்புக் காவலில் அடைக்க, தான் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவிக்கிறார் அவர்.
இப்போது எங்களை மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்று அவர் கூற, மற்றவர்கள், வரும் நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதால் கவலையடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
பிரித்தானிய உள்துறை அலுவலகம் மனிதர்களுக்கு நன்மை செய்வதில்லை. அவர்கள் என்னை நொறுங்கச் செய்துவிட்டார்கள், என் வாழ்வையே முடித்துவிட்டார்கள், நான் எங்கு செல்லப்போகிறேன், பாதுகாப்பாக இருப்பதற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என எதுவுமே தெரியவில்லை என்கிறார் Afran.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |