மத்திய கிழக்கில் சிக்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள செய்தி
ஈரான் போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக்கொண்ட சுவிஸ் நாட்டவர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள்...
மத்திய கிழக்கில் சிக்கியிருந்த சுவிஸ் நாட்டவர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ள சுவிஸ் ஃபெடரல் வெளியுறவு அமைச்சகம், இதற்கு மேல் அங்கு யாரும் சிக்கிக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளது.

அத்துடன், மத்திய கிழக்கிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுடனான விமான சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு விமானங்கள் வருவதாகவும் சுவிஸ் ஃபெடரல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஓரளவுக்கு விமானத்துறை சூழல் அமைதிக்குத் திரும்பிவிட்டது என்பது அதன் பொருளாகும்.
போர் துவங்கிய நேரத்தில், சுமார் 4,000 சுவிஸ் நாட்டவர்கள் சுவிஸ் ஃபெடரல் வெளியுறவு அமைச்சகம் உருவாக்கிய பயண ஆப்பில் பதிவு செய்திருந்தார்கள்.
அதாவது, அத்தனை பேர் மத்திய கிழக்கில் சிக்கியிருந்தார்கள். இப்போது அவர்கள் அனைவரும் நாடு திரும்பிவிட்டார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |