புலம்பெயர்தல் தொடர்பில் சுவிஸ் நாடாளுமன்றம் விடுத்துள்ள கோரிக்கை
புலம்பெயர்தல் பிரேரணை ஒன்று தொடர்பில், சுவிஸ் நாடாளுமன்றம் மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாடாளுமன்றம் விடுத்துள்ள கோரிக்கை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

அதாவது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.
புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
ஆனால், சுவிஸ் மக்கள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என சுவிஸ் நாடாளுமன்றம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அந்த பிரேரணையை நிராகரித்ததைப் போலவே, மேலவையும் அந்த பிரேரணையை நிராகரித்துவிட்டது.
ஆனால், மக்களிடையே அந்த பிரேரணைக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், புலம்பெயர்தலுக்கு எதிரான அந்த பிரேரணை, பிரச்சினைகளைத் தீர்க்காது, அது பிரச்சினைகளை உருவாக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ள நாடாளுமன்றம், மக்கள் அந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |