அது கடவுள் கொடுத்த வரம்! எந்த கோப்பையும் உங்கள் விளையாட்டை பறிக்க முடியாது..ரொனால்டோ குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் உருக்கம்
ரொனால்டோ எந்த காலத்திலும் தனக்கு உயர்ந்தவர் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
தோல்வியால் மனமுடைந்த ரொனால்டோ
கத்தார் உலகக்கோப்பை தொடரில் மொராக்கோ அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் போர்த்துக்கல் அணி வெளியேறியது.
தனது கடைசி உலகக்கோப்பை என்பதால் ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
@Getty
அந்த சமயம் எதிரணி வீரர்களும் ரொனால்டோவின் தோள் மீது கை வைத்து ஆறுதல் கூறினர்.
@Getty Images
விராட் கோலி உருக்கமான பதிவு
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரொனால்டோ குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'உலகம் முழுவதும் உள்ள இந்த விளையாட்டு மற்றும் விளையாட்டு ரசிகர்களுக்காக நீங்கள் செய்தவற்றை எந்த ஒரு கோப்பை அல்லது எந்த பட்டமும் பறித்து விட முடியாது. மக்கள் மீது நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும், நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பலர் என்ன உணர்கிறோம் என்பதையும், எந்த தலைப்பிலும் விளக்க முடியாது. அது கடவுள் கொடுத்த வரம்.
@Getty Images
ஒவ்வொரு முறையும் தனது இதயத்தை வெளிப்படுத்தும் ஒரு மனிதனுக்குடைய ஒரு உண்மையான ஆசீர்வாதம் மற்றும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சுருக்கம் மற்றும் உண்மையான உத்வேகமும் எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் இருக்கும். நீங்கள் எனக்கு எல்லா காலத்திலும் உயர்ந்தவர்' என தெரிவித்துள்ளார்.