இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: வெளியிடப்பட்டுள்ள வித்தியாசமான ஆதாரம்...
எதிர்பார்த்தது போலவே, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு சிக்கல் தோடங்கியாயிற்று. ஊடகங்கள் அவரைக் குறித்து பல்வேறு செய்திகளை புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டுவருகின்றன.
இந்நிலையில், ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சில வித்தியாசமான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ மீது குற்றச்சாட்டு
எக்கச்சக்கமான சிறுமிகளையும், இளம்பெண்களையும் கடத்தி, சீரழித்து, பணக்காரர்களுக்கு விருந்தாக்கிவந்தவர் அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
அரைகுறை ஆடைகளுடன் இளம்பெண்கள் சர்வசாதாரணமாக நடமாடும் அவரது விருந்துகளில் கலந்துகொண்டவர்கள் என, முன்னாள் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் முதல் பிரித்தானிய மன்னரின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூ முதலானவர்களின் பெயர்கள் வரை ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
Credit: AFP
இளவரசர் ஆண்ட்ரூ எப்ஸ்டீன் மாளிகையில் விருந்தில் கலந்துகொண்டபோது, அவர், விர்ஜினியா என்னும் 17 வயது இளம்பெண்ணுடன் மூன்று இடங்களில் வைத்து பாலுறவு கொண்டதாகவும், அதே இடத்தில் வைத்து, ஆண்ட்ரூ, 20 வயதான Johanna Sjoberg என்னும் இளம்பெண்ணின் உடலை தவறாகத் தொட்டதாகவும், தற்போது அமெரிக்க நீதிமன்றம் ஒன்று வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை
இந்நிலையில், அதே ஆவணங்களில் ஒன்று, இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்கிறது. அதாவது, அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் காதலி என கருதப்படுபவர் கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்னும் பெண்.
இந்தப் பெண்தான், இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவந்து எப்ஸ்டீனுக்கும் மற்ற பணக்காரர்களுக்கும் விருந்தாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கிஸ்லேனின் சட்டத்தரணியான Philip Barden என்பவர், இளவரசர் ஆண்ட்ரூவுடன் பாலுறவு கொண்டதாக விர்ஜினியா கூறுவது பொய் என்று கூறியுள்ளார். ஏனென்றால், விர்ஜினியா குளியல் தொட்டி ஒன்றில் தான் ஆண்ட்ரூவுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
Credit: Daily Telegraph
ஆனால், அந்தக் குளியல் தொட்டி மிகவும் சிறியது, ஆண்ட்ரூவோ உடல் பருமனானவர். ஆகவே, ஆண்ட்ரூவுக்கே அந்த குளியல் தொட்டி போதுமானதாக இல்லாதிருக்கும் நிலையில், அதில் விர்ஜினியா ஆண்ட்ரூவுடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறுவது பொய்யாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார் அவர்.
அவர் கூறுவதற்கு ஆதாரமாக, கிஸ்லேனின் சகோதரரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், ஆண்ட்ரூ மற்றும் விர்ஜினியா போன்று முகமூடி அணிந்த இருவர், ஒரு குளியல் தொட்டிக்குள் கால்களை முடக்கிக்கொண்டு அமர கஷ்டப்படுவதைக் காட்டும் காட்சி உள்ளது.
Credit: Alamy
அதாவது, இப்படி ஒரு தொட்டியில் இளவரசர் ஆண்ட்ரூவும் விர்ஜினியாவும் உடல் ரீதியான உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என கிஸ்லேனின் சகோதரரான அயன் மேக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Jae Donnelly
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |