சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு: வானிலை ஆய்வாளர்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னையில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
சென்னைக்கு ஆபத்து விலகியது
தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலத்தின் நெல்லூருக்கு கிழக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை சென்னைக்கு அருகாமையில் கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் இன்று (ஒக் - 16) அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மேலும் அவர், "சென்னையில் மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதால் மழை குறைந்துள்ளது. நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. சென்னையில் இன்று மழை பெய்யும், அதி கனமழை இருக்காது.
இன்று விட்டு விட்டு மழை தொடரும், மிக கனமழை இருக்காது. நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |