எங்கள் நாட்டில் விசா பிரச்சினை கிடையாது... சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை
மற்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது.
ஆகவே எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ளார் பிரான்ஸ் பல்கலை இயக்குநர் ஒருவர்.
சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பல்கலை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய இயக்குநரான Luis Vassy, தங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது, ஆகவே தங்கள் நாட்டுக்கு வரலாம் என சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ளார்.
இந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, இந்திய மாணவர்களை பிரான்சுக்கு கல்வி கற்க வரவேற்ற Vassy, தங்கள் பல்கலையில் பயிலும் மாணவர்களில் பாதிபேர் வெளிநாட்டவர்கள்தான் என்றும், பல்கலையில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கனடா அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் அந்த பிரச்சினை எல்லாம் கிடையாது. அதனால், சர்வதேச மாணவர்கள் வந்து எங்கள் நாட்டில் கல்வி கற்கலாம் என்று கூறுகிறார் Vassy.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |