61 ஓட்டங்களுக்கு சுருண்ட அணி: 7 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்
வங்காளதேச பிரீமியர் லீக் போட்டியில், சில்ஹெட் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நோஹாலி எக்ஸ்பிரஸ் அணியை வீழ்த்தியது.
நோஹாலி எக்ஸ்பிரஸ் ஆல்அவுட்
நோஹாலி எக்ஸ்பிரஸ் மற்றும் சில்ஹெட் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சில்ஹெட்டில் நடந்தது.
Pure muscle! 💪💥 Habibur Rahman smashes a huge six.
— Bangladesh Cricket (@BCBtigers) January 5, 2026
BASHUNDHARA CEMENT #BPL2026 pic.twitter.com/IGVOwVht5n
முதலில் களமிறங்கிய நோஹாலி எக்ஸ்பிரஸ் (Noakhali Express) அணியில் ஹபிபுர் ரஹ்மான் சோஹன் (18), மஹிதுல் இஸ்லாம் (25) ஆகியோரைத் தவிர ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நோஹாலி எக்ஸ்பிரஸ் அணி 14.2 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு சுருண்டது. மிரட்டலாக பந்துவீசிய நஸும் அகமது (Nasum Ahmed) 7 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சில்ஹெட் வெற்றி
பின்னர் ஆடிய சில்ஹெட் டைட்டன்ஸ் (Sylhet Titans), 8.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தவ்ஃப்க்யூ கான் (Tawfique Khan) 18 பந்துகளில் 32 ஓட்டங்களும், ஜாகிர் ஹசன் 24 (23) ஓட்டங்களும் விளாசினர். ஜாகிர் கான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |