60 ஆண்டுகளாக பலர் வாங்கியும் குடியேற மறுக்கும் ஒரு மாளிகை: அதன் பகீர் பின்னணி

Crime California
By Arbin May 06, 2024 08:30 AM GMT
Report

லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சொகுசு மாளிகையானது கடந்த 60 ஆண்டுகளாக பலர் சொந்தமாக்கியிருந்தாலும், எவரும் அதில் குடியிருக்க மறுப்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.

குடியிருக்க மறுப்பதன் காரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் உள்ள 2475 Glendower என்ற இந்த மாளிகையானது 5 படுக்கையறை மற்றும் 4 கழிவறைகளுடன் 5,000 சதுர அடியில் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பலர் வாங்கியும் விற்பனை செய்தும் வந்துள்ளனர்.

60 ஆண்டுகளாக பலர் வாங்கியும் குடியேற மறுக்கும் ஒரு மாளிகை: அதன் பகீர் பின்னணி | Nobody Wants To Live In California Mansion

ஒவ்வொருமுறையும் புதிய வாடிக்கையா:ளர் ஒருவர் வாங்குவதும், அதே வேகத்தில் அதை விற்பனை செய்வதுமாக இருந்து வருகிறது. இதனால், கடந்த 60 ஆண்டுகளாக எவரும் நிரந்தரமாகவோ அல்லது சில காலமோ அந்த மாளிகையில் தங்கியதில்லை.

தற்போது இந்த மாளிகையானது சேதமடையவும் தொடங்கியுள்ளது. தற்போதும், அதன் புதிய உரிமையாளர் அந்த பகுதியிலேயே குடியிருக்க மறுத்துள்ளார். அத்துடன், 2022ல் விற்பனை செய்ய முயன்றும், இதுவரை எவரும் வாங்கவும் மறுத்து வருகின்றனர்.

இந்த மாளிகையில் எவரும் குடியிருக்க மறுப்பதன் முதன்மை காரணம் என்பது 1959ல் நடந்த ஒரு சம்பவம். இங்கு குடியிருந்த கணவன் தனது மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்றதாகவே கூறப்படுகிறது.

1925ல் இந்த மாளிகையானது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகையில் ஹரோல்ட் மற்றும் புளோரன்ஸ் ஷூமேக்கர் தம்பதி முதல் முறையாக குடியிருந்தனர். ஆனால் 1928ல் ஒரே வாரத்தில் இருவரும் மரணமடைந்தனர்.

ரிலையன்சுக்கு முன்னர்... முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பெயர் இது தான்: வெளிவராத தகவல்

ரிலையன்சுக்கு முன்னர்... முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பெயர் இது தான்: வெளிவராத தகவல்

இந்த சம்பவத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்திரிகை ஆசிரியர் வெல்ஃபோர்ட் பீட்டனும் அவரது மகன் டொனால்டும் இந்த வீட்டில் குடியேறினர். ஆனால் திடீரென்று டொனால்டுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட, 21 வயதிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஊடக வெளிச்சம் கண்டது

அதே ஆண்டு கடனாளியான வெல்ஃபோர்ட் திவாலானதாக அறிவித்து, அந்த வீட்டைவிட்டு வெளியேறினார். 1956ல் மருத்துவர் ஹரோல்ட் பெரல்சன் தமது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த மாளிகையில் குடியேறினார்.

60 ஆண்டுகளாக பலர் வாங்கியும் குடியேற மறுக்கும் ஒரு மாளிகை: அதன் பகீர் பின்னணி | Nobody Wants To Live In California Mansion

ஆனால் மிக விரைவிலேயே அவர் கடனாளியானார். குடும்ப பிரச்சனை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 1959 டிசம்பர் 6ம் திகதி தூக்கத்தில் இருந்த மனைவியை சுத்தியலால் அடித்தே கொலை செய்துள்ளார் மருத்துவர் ஹரோல்ட்.

தமது பிள்ளைகள் மூவரையும் கொல்ல முயன்று தோல்வி கண்டவர், பொலிசார் அந்த வீட்டுக்கு வந்து சேரும் முன்னர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையால் மரணமடைந்தார்.

ஓராண்டுக்கு பின்னர் இந்த வீட்டை எமிலி மற்றும் ஜூலியன் என்ரிக்வெஸ் தம்பதி வாங்கியது. சுமார் பத்தாண்டு காலம் அவர்கள் இறக்கும் வரையில் இந்த வீட்டில் குடியிருக்கவில்லை என்பதுடன், அதன் பின்னர் அவர்கள் மகனுக்கு இந்த வீடு சொந்தமானது.

60 ஆண்டுகளாக பலர் வாங்கியும் குடியேற மறுக்கும் ஒரு மாளிகை: அதன் பகீர் பின்னணி | Nobody Wants To Live In California Mansion

2009ல் தான் இந்த வீட்டின் பின்னணி ஊடக வெளிச்சம் கண்டது. அதன் பின்னர் மிகவும் பிரபலமானது. 2016ல் லிசா ப்ளூம் மற்றும் அவரது கணவர் இந்த வீட்டை 2.3 மில்லியன் டொலர் தொகைக்கு சொந்தமாக்கினர்.

2020ல் Ephi Zlotnitsky என்பவர் 2.35 மில்லியன் டொலர் தொகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் 2022ல் 5.5 மில்லியன் டொலருக்கு விற்க முயன்றும், இதுவரை எவரும் வாங்க முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

   

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US