புதிய தலைவராகும் நோயல் டாடா.., அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நோயல் டாடா யார் என்பதை பற்றியும், அவரது சொத்து மதிப்பு பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் இந்த நோயல் டாடா (Noel Tata)?
இந்திய பெரும் தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் கடந்த 9 -ம் திகதி உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் பல்வேறு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர், சர் டோபர்ஜி டாடா டிரஸ்ட் (Dorabji Tata Trust) மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் (Sir Ratan Tata Trust) குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது இவர் டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களில் துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர், கடந்த 2010 -ம் ஆண்டில் டாடா இன்டர்நேஷனல் (Tata International) நிறுவனத்திற்கு தலைமை வகித்தார். அப்போது, 500 மில்லியன் டொலரில் இருந்து 3 பில்லியன் டொலராக அதன் வருவாயை உயர்த்தினார்.
இவருக்கு, நெவில், மாயா மற்றும் லியா என்று 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய மனைவி ஆலோ மிஸ்ரி, டாடா சன்சில் பெரிய பங்குதாரராக உள்ளார்.
இவருடைய மகன் நெவில் டாடா ஸ்டார் பஜார் நிர்வாகத்தை நடத்தி வருகிறார். முதல் மகள் லியா டாடா, இந்தியன் ஓட்டல்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலும், மாயா, டாடா கேப்பிட்டல்ஸ் உறுப்பினராகவும் உள்ளார்.
டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நோயல் டாடாவின் சொத்து மதிப்பு சுமார் 1.5 பில்லியன் டொலர் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், ரூ.12 ஆயிரத்து 455 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |