டாடா சாம்ராஜ்யத்தின் முக்கிய பொறுப்பில் வாரிசுகள் நியமனம்
ரத்தன் டாடாவின் அறக்கட்டளை பிரிவு ஒன்றின் முக்கிய பொறுப்பிற்கு நோயல் டாடாவின் வாரிசுகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோயல் டாடா
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு பிறகு நிறுவனங்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடாவின் மகள்களான மாயா, லியா ஆகிய இருவரும் சர் ரத்தன் டாடா இன்டஸ்ட்ரியல் இன்ஸ்டிடியூட் (SRTII) அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கான வேலை வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த பிரிவின் குழுவில்தான் இருவரும் செயல்படப் போகின்றனர்.
அறங்காவலர்களாக இருந்த அர்னாஸ் கோட்வால் மற்றும் ஃப்ரெடி தலாட்டிக்கு பதிலாக இந்த நியமனம் நடந்துள்ளது.
ஃப்ரெடி தலாட்டி National Centre for the Performing Arts (NCPA) மையத்தில் இருக்கிறார். அர்னாஸ் கோட்வால் துபாய்க்கு இடம்பெயர்ந்து VFS குளோபல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
விரிசல்
இதற்கிடையில், தன்னை பதவி விலக நோயல் டாடாவின் வற்புறுத்தலின் பேரில், தாராபோரேவாலா கேட்டுக் கொண்டதால் வெளியேறியதாக கோட்வால் கூறியதாக அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதுதொடர்பாக சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலர் மெஹ்லி மிஸ்திரியிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும் மாயா மற்றும் லிசாவின் நியமனம் அர்னாஸ் கோட்வாலுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |