மகனை பார்த்து குறைத்த நாய் - காரில் கட்டி 3 கி.மீ இழுத்துச் சென்று தந்தை கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியில், அமித் என்பவர் தனது 10 வயது மகனுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
நாயை இழுத்து சென்ற தந்தை
அப்போது அவரது மகன், அங்கே ஒரு வீட்டில் கட்டப்பட்டிருந்த ஜேர்மன் ஷெப்பெர்ட் நாய் மீது கல்லெறிந்துள்ளார்.
அப்போது நாய் குறைத்ததில் பயந்த சிறுவன், கீழே விழுந்து அழத்தொடங்கியுள்ளார்.
இதனை கண்டு நாய் மீது ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை குச்சியை வைத்து 4 வயது நாயை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், நாயை தனது காரில் கட்டி 3 கிமீ தூரத்திற்கு தரதரவென இழுத்து சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நாய், தற்போது விலங்குகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
நாயின் உரிமையாளர் ஷோபா ராணி, இது தொடர்பாக அமித் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அமித்தை கைது செய்ததோடு, அவர் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |