ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி
நெய்டாவின் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து அச்சம் சமீபத்தில் இணையத்தில் வெளியான காணொளி ஒன்றுக்கு பிறகு அதிகரித்துள்ளது.
நொய்டாவில் அதிகரிக்கும் குடியிருப்பாளர்களின் கவலை
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்த கவலைகள் நொய்டா மக்களிடையே அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த கவலையை பன்மடங்கு உயர்த்தும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோடிக்கணக்கில் மதிப்பு கொண்ட குடியிருப்பின் சுவரில் சாதாரண பென்சிலை சிறிய சுத்தியால் அடித்து உள்ளே செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
@kabeer.unfiltered என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்ட இந்த வீடியோ, நாம் நமக்கான வீட்டை கட்டும் போது, அங்கு நின்று அனைத்தையும் பார்த்து பார்த்து கட்டுவோம். அப்படி நடக்காவிட்டால் இது தான் நடக்கும் என தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வீடியோவில் குடியிருப்பாளர் தனது திகைப்பையும் வெளியிட்டுள்ளார், “சுவரில் நான் பென்சிலை சிறிய சுத்தியல் கொண்டு தட்டினேன், அது எந்தவொரு சிரமமும் இன்றி அப்படியே உள்ளே சென்று விட்டது, இதற்கு ட்ரில் இயந்திரம் கூடத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

வியப்பை ஏற்படுத்தும் வீட்டின் விலை
இந்த வீடியோ எடுக்கப்பட்ட குடியிருப்பின் விலை தோராயமாக ரூ.1.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ, கடுமையான விமர்சனத்தையும், விவாதத்தையும் தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |