விரைவில் அறிமுகமாகவுள்ளது நோக்கியா 3.4
நோக்கியா நிறுவனம் விரைவில் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த போன்களை சந்தைப்படுத்தும் HMD குளோபல் நிறுவனம் இதை உறுதி செய்திருந்தாலும் இந்தியாவில் இந்த போன் எப்போது வெளியாகின்றது என்ற வெளியீட்டு தேதியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது.
இருந்தாலும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனுடன் இந்த போனும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
கடந்த செப்டம்பர் ஐரோப்பிய நாடுகளில் நோக்கியா 3.4 போன் மூன்று வண்ணங்களில் வெளியாகி இருந்தது.
அதனால் இந்தியாவில் வெளியாகவுள்ள 3ஜிபி ரேம் கொண்ட நோக்கிய 3.4 போனின் விலை 11999 ரூபாய் இருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
இதன் சிறப்பம்சம்
- ஆண்ட்ராய்ட் 10இல் இயங்கும் இந்த போன் HD+ டிஸ்பிளேவில் வெளியாகி உள்ளது.
- இதன் திரை அளவு 6.39 இன்ச்.
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்நேப்டிரேகன் 460 SoC உடன் 3ஜிபி மற்றும் 4ஜிபி வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- ரியர் சைடில் ட்ரிபிள் கேமிரா மற்றும் 8 மெகாபிக்ஸல் கொண்ட செல்ஃபி கேமிராவும் இடம்பெற்றுள்ளது.
- 32ஜிபி மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி
- 4000 மில்லியாம்ப் பேட்டரி
- டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளது.