இந்திய சந்தையில் களமிறங்கும் நோக்கியா C22 ஸ்மார்ட்போன்: குறைந்த விலையில் பல சிறப்பம்சங்கள்
நோக்கியா நிறுவனம் தங்களது புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆன சி 22-வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி-22 ஸ்மார்ட்போன்
பின்லாந்தின் ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் தங்களது நோக்கியா ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நோக்கியா நிறுவனம் தங்களது புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் C 22-வை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
ஆண்ட்ராய்டு 13 கோ எடிசன் மற்றும் ஆக்டா-கோர் Unisoc T606 சிப்செட்டுடன் இந்த போன் சந்தையில் களமிறங்கியுள்ளது.
6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டுள்ள நோக்கியா சி-22, பின்புறம் 13+2 என்ற மெகாபிக்சல் அளவிலான இரண்டு கேமராக்களையும், முன்புறம் 8 மெகாபிக்சல் அளவிலான கேமரா வசதிகளையும் கொண்டுள்ளது.
5000mAh பேட்டரி திறன் கொண்ட இந்த போனில், 10 வாட்ஸ் வேகத்திலான டைப் சி சார்ஜிங் போர்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
நோக்கியா சி22-வின் விலை
2 ஜிபி ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் ரூ7,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அதைப்போல 4 ஜிபி ரேம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் ரூ8,499க்கு விற்பனைக்கு வந்துள்ளது.