அதிவேக சார்ஜிங்! மிக குறைந்த விலை... மீண்டும் சந்தைக்கு வந்த நோக்கியோ ஸ்மார்ட்போன்
நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்தியாவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் பெற்றிருக்கிறது.
நோக்கியோ சி31 ஸ்மார்ட்போன்
இதையடுத்து சமீபத்தில் நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 1600 x 720 ரெசல்யூஷன் கொண்ட 6.74-இன்ச் LCD டிஸ்பிளே, வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் மற்றும் 2.5டி கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
1.6Hz octa-core Unisoc processor ப்ராசஸ்ரில் இயங்கும் ஸ்மார்ட்போன் இது. மேலும் இதன் பேஸ் வேரியண்டில் 3ஜிபி + 32ஜிபி, 4ஜிபி+64ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
nokia.com
அதிவேக சார்ஜிங் வசதி
இதுதவிர 5050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா சி31 மொடலில் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 மெகாபிக்சல் செல்பி கெமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
விலை விபரங்கள்: 3GB ரோம் + 32GB மொபைலின் விலை ரூ.9,999. 4GB ரோம் + 64GB மொபைலின் விலை ரூ.10,999.
nokia.com