நோக்கியா வெளியிடும் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் சந்தை விற்பனையில் முதல் ஐந்து இடத்தில் கூட இல்லாத நோக்கியா நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் சமீப காலமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் ஒடியோ பாகங்களை வெளியிட இருக்கிறது.
நோக்கியா எக்ஸ் ஆர் 20, நோக்கியா 6310 , நோக்கியா சி 30 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் துல்லியத்துடன் கேட்கக் கூடிய ஒடியோ வசதியும் இடம்பெற்று இருக்கிறது.
நோக்கியா எக்ஸ் ஆர் 20 ஸ்மார்ட்போன் அதிகப்படியான வெப்பத்தைத் தாங்கக் கூடியது என்றும் , 1.8 எம் ட்ராப்ஸ் மற்றும் 1 மணி நேரம் நீரில் கிடந்தாலும் எவ்வித பாதிப்பும் அடையாது எனவும் கொரில்லா விக்ட்ஸ் திரையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் ஆயுளை பரிசோதிக்க பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் ராபர்டோ கார்லோஸ் மற்றும் பெண் உலக சாம்பியன் லிசா சிமோச்சேவும் தொடர் பரிசோதனைகள் மூலம் அதன் தரத்தை உறுதி செய்தனர்.
நோக்கியா எக்ஸ்ஆர் 20, 48 எம்பி மற்றும் 13 எம்பி என இரண்டு கமெராவுடனும் சீஸ் ஒளியியல், ஓசோ இடம் சார்ந்த ஒடியோ மற்றும் புதுமையான இமேஜிங் தீர்வுகளைக் கொண்டுள்ளது.
மற்றொரு ஸ்மார்ட்போன் சி 30 , 6.82 இன்ச் அளவில் எச் டி தொடுதிரையுடன் நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி அமைப்பைக் கொண்டு வெளிவருகிறது .