Nokia T20 ஆண்ட்ராய்டு டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள Nokia T20 ஆண்ட்ராய்டு டேப்லெட்டின் சிறப்பு அம்சங்கள் மற்றும் அதன் விலை குறித்து பார்க்கலாம்.
HMD குளோபலின் நோக்கியா தனது முதல் ஆண்ட்ராய்டு டேப்லெட்டான நோக்கியா T20யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 1-ஆம் திகதி இந்திய சந்தையில் இந்த சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
அதிகமாக வீடியோக்களை பார்ப்பவர்களுக்காகவும் மற்றும் கேம் பிரியர்களுக்காகவும் 10.4" 2K IPS LCD டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது. இது 1200 x 2000 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது.
மேலும், 8200 mAh பேட்டரி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், OZO ஆடியோ, டியூயல் மைக்ரோபோன் போன்ற அட்டகாசமான அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
Nokia T20 Tablet, வை-பை 3 ஜிபி ரேம்/32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், வை-பை 4 ஜிபி ரேம்/64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், வை-பை மற்றும் LTE 4 ஜிபி ரேம்/64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என மூன்று மாடல்களாக இந்த டேப்லெட் சாதனம் சந்தையில் கிடைக்கிறது.
Nokia T20 ஆனது Unisoc T610 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இது 12 nm கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு octa-core செயலி மற்றும் Mali G51 GPU உடன் வருகிறது. மேலும் Android 11 இல் இயங்குகிறது.
மேலும் இதில், 3.5 ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் உள்ளது. இதிலிருக்கும் USB-PD Type-C 15W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது, ஆனால் மொபைல் பாக்ஸில் 10W சார்ஜருடன் அனுப்பப்படுகிறது.
நோக்கியா டி20யின் பின்புற பேனலில் 8எம்பி கேமரா உள்ளது, மேலும் முன்பக்கத்தில் வீடியோ கால்களில் கலந்துகொள்ள 5எம்பி கமெரா உள்ளது.
விலை என்ன?
Nokia T20 3GB + 32GB (WiFi Only) மாடலின் விலை ரூ. 15,499-க்கும், Nokia T20 4GB + 64GB (WiFi Only) மாடல் ரூ. 16,499-க்கும் மற்றும் Nokia T20 4GB + 64GB (WiFi + LTE) மாடலின் விலை 18,499-க்கும் கிடைக்கிறது.
இந்த டேப்லெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது மேலும் இது ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கும்.
2 வருட OS புதுப்பிப்புகள் மற்றும 3 ஆண்டுகள் வரை மாதந்தோறும் செக்யூரிட்டி சார்ந்த அப்டேட்ஸ்கலையும் இந்த சாதனத்தில் இலவசமாக பெறலாம் என HMD உறுதியளித்துள்ளது.
Work, learn and play, the #NokiaT20 has you covered.
— Nokia Mobile (@NokiaMobile) October 28, 2021
Whether sitting through online meetings, watching your favorite show or taking part in a yoga class, the #NokiaT20 is designed to last ?
Do what you love, for longer ?#LoveItTrustItKeepIt pic.twitter.com/bFAraZSckD
Thrilled to announce that #NokiaT20 our first #Tablet ever, arrives in India before #Diwali With versatile features for learning, entertainment & work, it's designed to last. Will be available across Retail stores @Flipkart & our website: https://t.co/5OiWH2k1LX
— Sanmeet S Kochhar (@sanmeetkochhar) November 1, 2021
#LoveTrustKeep pic.twitter.com/5e6wLumz9Y