மீண்டும் கலக்கப்போகும் நோக்கியா! பட்ஜெட் விலையில் புதிய Smartphone... இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கே
Nokia X100 5G என்று பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் பிரைஸ் கேட்டகிரியில் இந்த 5ஜி போன் வந்துள்ளது, எச்எம்டி குளோபல் நிறுவனம் மூலமே இந்த போன் அறிமுகம் ஆகியுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 ப்ராஸ்சஸர் மூலம் இயங்குகிறது. இதன் பின்பக்கத்தில் 48MP குவாட் கேமரா செட்டப்பை கொண்டு வருகிறது.
Nokia X10 மற்றும் Nokia XR20 உடன் இந்த ஃபோன் இணைந்தாலும் பட்ஜெட் ஃபிரெண்ட்லி மாடல் என்பதால் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வருகிறது. இந்த Nokia X100 5G-ஐ தற்போது அமெரிக்காவில் மட்டுமே பிரத்யேகமாக அறிமுகப்படுத்தி இருக்கிறது HMD நிறுவனம்.
எனினும் புதிய Nokia X100 5G அமெரிக்காவிற்கு வெளியே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்த தகவலை இதுவரை HMD வெளிப்படுத்தவில்லை. எனினும் பட்ஜெட் ஃபோன் என்பதால் Nokia X100 5G-ன் செயல்திறன் மற்றும் பிற விவரக்குறிப்புகளும் சிறப்பானவையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட Nokia X100 5G ஸ்மார்ட் ஃபோனின் விலை அமெரிக்காவில் 252 டாலராக (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,700), (இலங்கை மதிப்பில் தோராயமாக 50,901.38) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வரும் நவம்பர் 19 முதல் அங்கு விற்பனைக்கு வர உள்ளது. கேமெரா செட்டப்பை பொறுத்த வரை Nokia X100 5G-ன் பின்புறம் 48-MP பிரைமரி கேமரா, 5-MP அல்ட்ராவைட் கேமரா, 2-MP டெப்த் கேமரா மற்றும் 2-MP மேக்ரோ கேமரா உள்ளது.
இதன் முன்புறம் பஞ்ச்-ஹோல் டிசைனில் செல்ஃபிக்களுக்காக 16MP கேமராவும் உள்ளது. இந்த ஃபோனில் 4470mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 18W ஃபாஸ்ட் சர்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.