'இராணுவ தரத்தில்' Nokia அறிமுகப்படுத்திய முரட்டுத்தனமான 'XR20' ஸ்மார்ட்போன்! விலை, சிறப்பம்சங்கள் இதோ..
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் HMT குளோபல் நிறுவனம் நேற்று தனது புதிய முரட்டுத்தனமான, கடுமையான சூழலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Nokia XR20 Rugged ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
Nokia XR20 Rugged ஒரு இராணுவ தர வடிவமைப்புடன், 5G சிப்செட், இரட்டை பின்புற கேமராக்கள், ஒரு குறிப்பிடத்தக்க பேட்டரி மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகம் செயப்பட்டது. இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளேவைப் பொறுத்த வரை 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளேவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus protection) பாதுகாப்புடன், கையுறை அணிந்தபடி பயன்படுத்தகூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ - கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், அட்ரினோ 619 ஜி.பி.யுவும் இடம்பெற்றுள்ளது. இது ஸ்பீடான இயக்கத்துக்கு உதவும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் யூசர் அனுபவத்தை கொடுக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சந்தையில் களமிறங்கும்போது ஆன்டிராய்டு 11 இயங்குதளத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன், பின்னர் ஆன்டிராய்டு 12 அப்டேட்டை பெறும்.
இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்பில்டு மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதியும் உள்ளது. கூடுதலாக 512GB வரை மெமரி கார்டை சேர்த்துக்கொள்ள, கூடுதல் ஸ்லாட்டும் இன்பில்டாக கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்த வரை நோக்கியா XR20 Rugged ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 பிரைமரி கேமரா, 13 எம்.பி வைடு கேமரா என மொத்தம் இரு ZEISS optics கமெரா இடம்பெற்றிருக்கும். செல்பி மற்றும் வீடியோ கால்கள் பேசுவதற்காக முன்பக்கம் 8 எம்.பி கமெரா கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 4630 எம்ஏஎச் பேட்டரி, 18 பாஸ்ட் சார்ஜிங் இணைப்பு, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டெண்ட், ப்ளூடூத், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்.
இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ரீடர் உள்ளது. இந்த சாதனம் 1.8 மீட்டரில் இருந்து வீழ்ச்சியிலிருந்து தப்பித்து, ஒரு மணி நேரம் வரை நீருக்கடியில் இருக்க முடியும் என்று HMD குளோபல் கூறுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் MIL-STD810H சான்றிதழ் பெற்றது மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான IP68 ரேட்டிங் பெற்றுள்ளது.
நோக்கியா எக்ஸ்ஆர் 20 இந்தியாவில் 6 ஜிபி/128 ஜிபி வேரியன்ட் விலை ரூ. 46,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாதனம் கிரானைட் மற்றும் அல்ட்ரா ப்ளூ நிறங்களில் வருகிறது மற்றும் அக்டோபர் 20-ஆம் திகதி முதல் முன்பதிவுக்காக கிடைக்கும், முதல் விற்பனை அக்டோபர் 30-ல் தொடங்குகிறது.
இந்த சாதனம் நோக்கியா.காம் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் கிடைக்கும். எக்ஸ்ஆர் 20-ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச Nokia Power Earbuds Lite மற்றும் ஒரு வருட திரை பாதுகாப்பு கிடைக்கும்.