சுவிஸில் குடியேறும் பிரபல நாட்டின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! போட்டி போட்டு கவர்ந்திழுக்கும் மாகாணங்கள்
சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்களுக்கு அடுத்தபடியாக சீனாவின் பெரும் பயணக்காரர்கள் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெறுவது கடினம். ஆனால், பெரும் பணக்காரர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தில் உள்ள ‘special paragraph-ன்’ படி, ஐரோப்பியர்கள் அல்லாத பெரும் பணக்காரர்கள் சுலபமாக சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு அனுமதி பெறலாம்.
சவிஸ் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 30-ன் படி, மாகாண நிதி நலன்கனுக்காக ஐரோப்பியர்கள் அல்லாத பெரும் பணக்காரர்களுக்கு மாகாணங்கள் சுலபமாக குடியிருப்பு அனுமதி வழங்கலாம்.
வெளிநாட்டு பெரும் பணக்காரர்களை கவர்ந்திழுக்க சுவிஸின் பல மாகாணங்கள் வரிச்சலுகை வழங்கு வருகின்றன.
இந்த முறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பியர்கள் அல்லாத பெரும் பணக்காரர்கள் சுமார் 40-50 பேருக்கு குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சமீப காலம் வரை ரஷ்யாவிலிருந்து குடியேறியவர்கள் தான் அதிகமாக இருந்தது, ஆனால், தற்போது சீனர்கள் அவர்களை மிஞ்சியுள்ளனர்.
2020 ஆண்டு முடிவில் வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தில் உள்ள ‘special paragraph-ன்’ கீழ் 29 சீன பெரும் பணக்காரர்கள் சுவிஸில் குடியேறி வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
ரஷ்யர்களை தொடர்ந்து சுவிஸில் அதிகமாக வாழும் இரண்டாவது பெரிய குழுவினராக சீனர்கள் உருவெடுத்துள்ளனர். பெரிய முன்னேற்றத்திற்கான ஆரம்பமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.
சீன பெரும் பணக்காரர்கள் மத்தியில் சுவிஸ் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதாக சிறப்பு வரி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.