வெளிநாட்டவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கும் சுவிட்சர்லாந்து
வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவது கடினமான விடயம் என்பது உலகத்துக்கே தெரியும்.
அரசியல் கட்சிகள் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்நிலையில், மீண்டும் வெளிநாட்டவர்களுக்கெதிரான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சுவிஸ் அரசு முயற்சி மேற்கொண்டுவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கெதிராக ஒரு திட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தைச் சேராத மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
தற்போது, சுவிஸ் அரசாங்கம், பிரித்தானியா உள்ளிட்ட மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஆண்டொன்றிற்கு 12,000 பணி உரிமங்கள் மட்டுமே வழங்குவது என வரம்பு வைத்துள்ளது.
ஆனால், சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Elisabeth Baume-Schneider, அந்த எண்ணிக்கையை மேலும் குறைத்து 9,600 ஆக ஆக்க விரும்புகிறார்.
இத்தனைக்கும், சில குறிப்பிட்ட பணிகளில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் சுவிட்சர்லாந்திலும் இல்லை, ஐரோப்பிய ஒன்றியத்திலும் இல்லை. ஆனாலும், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி உரிமங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசின் திட்டத்தை, சுவிஸ் பணியாளர்கள் கூட்டமைப்பே விமர்சித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணி உரிமங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |