பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய 18 வயது வீரர்! 3 விக்கெட் வீழ்த்தி அபாரம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 282 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
பாபர் அசாம் அரைசதம்
சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை துவங்கியது. இமாம் உல் ஹக் 17 ஓட்டங்களில் வெளியேறியதைத் தொடர்ந்து, கேப்டன் பாபர் அசாம் மற்றும் அப்துல்லா ஷஃபிக் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவர்களது கூட்டணியின் மூலம் சீரான வேகத்தில் பாகிஸ்தானின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால் நூர் அகமது பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
அவரது பந்து வீச்சில் முதலில் ஷஃபிக் 58 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த ரிஷ்வானும் அவரது ஓவரிலேயே வெளியேறினார்.
இதற்கிடையில் அரைசதம் அடித்த பாபர் 74 ஓட்டங்களில் நூர் அகமது ஓவரில் நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷகீல் 25 ஓட்டங்களில் அவுட் ஆக, ஷதாப் கான் மற்றும் இஃப்டிக்கார் அகமது தலா 40 ஓட்டங்கள் விளாசினர்.
Twitter (@TheRealPCB)
நூர் அகமது அபாரம்
இதன்மூலம் பாகிஸ்தான் 282 ஓட்டங்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
18 வயதே ஆன நூர் அகமதுவிற்கு இது 4வது ஒருநாள் போட்டி ஆகும். தொடக்கத்தில் அவரது ஓவரில் ஓட்டங்கள் எடுக்க பாகிஸ்தான் அணி தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
Twitter (@ACBofficials)
Twitter (@ACBofficials)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |