வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா?

Vijay Social Media
By Karthikraja Jul 18, 2026 02:56 PM GMT
Report

 முதல்வர் விஜய் குறித்த செய்திகள் வட இந்தியாவை சேர்ந்த சமூகஊடக பக்கங்களால் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.

முதல்வர் விஜய்யை வைத்து பரப்பப்படும் போலி செய்திகள்

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு, முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா? | North India Influencers Spread Fake News On Vijay

தேர்தல் பிரச்சரத்தின் போது விஜய் பேசிய வீடியோக்களை, சில நிமிடங்களில் அவரது கட்சியின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்கள் மூலம் மில்லியன்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

ஆட்சிக்கு வந்த பின்னரும், விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளை உடனுக்குடன் ரீல்ஸ் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

ஆனால், இதில் பல முந்தைய அரசின் திட்டங்களை தவெக ஆட்சியில் நடைபெற்றதாக தவெகவினர் பரப்புவதாக விமர்சனங்கள் எழுந்தது.

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

சமீபத்தில் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து புகார் அளித்தால், புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தியை பரப்பினர்.

பின்னர், அந்த செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது.

வடஇந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய்

இப்போது தமிழ்நாட்டை தாண்டி, குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த சமூகஊடக Influencers பலரும் முதல்வர் விஜய் குறித்த பொய்யான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனை வட இந்தியாவை சேர்ந்த ஊடகமான IndiaToday அம்பலப்படுத்தியுள்ளது.

ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்தால், அவரது முழு மருத்துவக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக ஒரு போலியான வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.

ஒரு சிலர், இது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக, பரிந்துரைத்துள்ளதாக கூறிய நிலையில், சிலர் முதல்வர் நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவே பகிர்ந்துள்ளனர்.

வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா? | North India Influencers Spread Fake News On Vijay

லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை வைத்துள்ள சமூக ஊடக Influencers பகிர்ந்த வீடியோக்களை பல மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் கமெண்ட்களில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதே போல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக பல வட இந்திய சமூகஊடக பக்கங்கள் மற்றும் Influencers பகிர்ந்துள்ளனர்.

இது பொய் செய்தி என அறியாத வட இந்திய பயனர்கள் பலரும் உண்மை என நம்பி இதற்கு முழு ஆதரவும் அளிக்கிறோம் என கமெண்ட் செய்துள்ளனர்.

ஒரு சிலர் இப்படி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை, இது மோடிக்கு பரப்பட்டது போல் போலியான செய்திகள் பரப்படுகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

மோடி பிரதமர் ஆவதற்கு முன்னர் குஜராத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல்வேறு மொழிகளில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பப்பட்டு மோடி அலை உருவாக்கப்பட்டது.

முதல்வர் விஜய் குறித்து போலியான செய்தி வெளியிட்ட சமூக ஊடக Influencers பலரை IndiaToday தொடர்புகொண்டு, ஏன் தவறான தகவல்களைப் பரப்புகிறீர்கள் என்று கேட்ட போது அவர்களில் யாரும் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த வீடியோக்களை சமூகஊடகங்களில் பார்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் ஏன் இவ்வாறு ஒரே மாதிரியான போலி செய்திகள் வட இந்திய சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது இது திட்டமிட்டு பரப்படுகிறதா?, முதல்வர் விஜய் தேசிய அளவில் மோடிக்கு நிகராக முன்னிறுத்தப்படுகிறாரா?என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US